அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட அவர்களின் தகவலின்படி, பதிவு செய்யப்பட்ட தன்சல்களுக்கு இன்று மற்றும் நாளை சிறப்பு சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், பொசன் வலயங்களைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் இந்த வாரம் முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், தன்சல்களில் உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமிப்பது ஆபத்தானது என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய் நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் சுகாதார கவனம் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பானங்கள் மற்றும் உணவுகளை வழங்கும் பொருட்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
