இன்றைய சந்தை நிலவரப்படி, WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 0.85 சதவீத அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 92.33 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், 0.96 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மர்பன் (Murban) கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, மர்பன் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 88.24 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், 3.98 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகக் கவலைகள் காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் தொடர்ந்தும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
.jpeg)