அமெரிக்க முற்றுகையை மீறிய ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி.



அமெரிக்காவின் கடுமையான கடல் வழி முற்றுகையை தாண்டி, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் இரண்டு மாதங்களாக நீடித்திருந்த இந்த முற்றுகைக்கு மத்தியிலும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியதாக சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் உலக சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலவரத்தின் தாக்கமாக, சர்வதேச பெஞ்ச்மார்க் ஆகக் கருதப்படும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவடைந்து, ஒரு பீப்பாய் 78.40 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.