போர் அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் புதிய உயர்வு.



 மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வடைந்து வருகின்றன.

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 0.86 சதவீதம் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 96.86 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெயின் விலை 0.85 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றின் விலை 94.61 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெயின் விலை 1.66 சதவீதம் உயர்வடைந்து, பீப்பாய் ஒன்றின் விலை 96.09 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேநேரம், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரித்து, ஒரு அலகின் விலை 3.171 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

ஈரான் நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் உள்ளிட்ட சமீபத்திய புவிசார் அரசியல் பதற்றங்களும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சங்களும் எண்ணெய் விலைகளின் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.