அதன்படி, இன்று (16) காலை 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும்.
நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளில் கம்பஹா மாநகர சபை எல்லை, கம்பஹா பிரதேச சபை எல்லை, மஹர பிரதேச சபை எல்லை, வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல, மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அடங்குகின்றன.
மேலும், ரன்பொகுணுகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வத்துபிட்டிவல, நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படவுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
