எம்பிலிபிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து! – 22 பேர் காயம்.

 


எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (3) காலை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 22 பேரும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.