அட்லான்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த.ப் போட்டியின் 6-வது நிமிடத்திலேயே மைக்கேல் சடிலேக் அடித்த கோல் மூலம் செக் குடியரசு அணி முன்னிலை பெற்றது. முதல் பாதி முழுவதும் அந்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்ட செக் குடியரசு, தென் ஆப்பிரிக்காவுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியது.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி, 83-வது நிமிடத்தில் சமநிலை கோலைப் பதிவு செய்து போட்டியை மீண்டும் திறந்தது.
இதன்பின்னர் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க முயன்ற போதிலும், கூடுதல் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்ததுடன், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
.jpeg)