விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹ
ஷீஷ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 352 மில்லியன் ரூபாவை விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், போதைப்பொருள் நாட்டிற்குள் கடத்தப்பட முயற்சிக்கப்பட்டதா அல்லது வேறு நாட்டிற்கு கொண்டு செல்லப்படவிருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
