ஈரானியப் படைகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM இன் பிரதானி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவி வரும் போர்நிறுத்த சூழ்நிலையை அமெரிக்கா மிகவும் கவனமாகவும் நிதானத்துடனும் கையாள்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா மேற்கொண்ட இந்த தாக்குதல்களுக்கு ஈரான் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் எதிர்கால அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
