அமெரிக்க டொலர் விலை மீண்டும் உயர்வு: 330 ரூபாயை கடந்தது.

 


அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபாயின் அடிப்படையில் மீண்டும் உயர்ந்து 330 ரூபாயை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில், நேற்று (26) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் இருந்தது.

இதன் மூலம், ஒரே நாளில் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளதுடன், இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதாக பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.