இலங்கை ரூபா மீண்டும் வலுப்பெற்றது – டொலர் விலை குறைவு.



 அமெரிக்க டொலருக்கு நிகராக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க குறைவாகும். அன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 342.63 ரூபாவாகவும், விற்பனை விலை 354.03 ரூபாவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இலங்கை நாணய சந்தையில் ரூபாவின் மதிப்பு மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.