மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை வெளியீடு

 


நாட்டின் மூன்று மாவட்டங்களிலுள்ள சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) தெரிவித்துள்ளது.

இன்று (22) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழைவீழ்ச்சியால் மண் தளர்ச்சி, சிறிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் கற்கள் சரிவதற்கான அபாயம் காணப்படுவதால், ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மண் பிளவுகள், மரங்கள் சாய்வு, நீரோட்ட மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.