நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவிலான கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி கண்காணிப்பு மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் வெயங்கொட பகுதியில் 238 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பகுதியில் 230 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியான கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
