பல பகுதிகளில் பகல் நேரங்களிலும் இருள் சூழ்ந்த மற்றும் பனிமூட்டமான நிலை காணப்படுவதால், அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தபடி பயணிக்குமாறு ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறும் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, வாகன வேகத்தை மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்குள் கட்டுப்படுத்தி, பாதுகாப்பான இடைவெளியை பேணியவாறு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணிக்கும் போது திடீரென பிரேக் பயன்படுத்துவது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
