இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், EV பயனர்களின் காத்திருப்பு நேரத்தை குறைத்து அதிக வசதியை வழங்குகிறது. தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் வாடகை வாகன சாரதிகள் மற்றும் நிறுவன வாகனங்களுக்கும் இது பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த சார்ஜிங் நிலையம் 24 மணிநேரமும் (24/7) பாதுகாப்பாகவும் தொழில்முறை முறையில் நிர்வகிக்கப்பட்டு செயல்படுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பேலியகொடை பகுதியில் இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
திறப்பு விழாவை முன்னிட்டு, மே 20 முதல் ஜூன் 21 வரை EV வாடிக்கையாளர்களுக்கு முதல் சார்ஜிங் இலவசமாக வழங்கப்படுவதாகவும், ஏனைய அனைத்து EV உரிமையாளர்களுக்கும் 50% தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து Evolution Auto நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைப் பிரிவின் தலைவர் நுரான் சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் EV பயன்பாட்டை ஊக்குவிக்க நம்பகமான மற்றும் வேகமான சார்ஜிங் உட்கட்டமைப்பு அவசியம் எனவும், இந்த முயற்சி நாட்டின் பசுமைப் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சார்ஜிங் நிலையம் இலங்கையின் EV உட்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
