கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டனில் சிகரெட் கடத்தல்; வெளிநாட்டவர் சிக்கினார்



 கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.