ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், சுமார் 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், அவை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட பணிகளுக்காக 78 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமான ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான நிர்மாணப் பணிகளுக்காக 112.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான முழு நிதியும் உள்நாட்டு நிதியுதவிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
