கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்று பொதியின் விலை 20 ரூபா உயர்வு; பிற சிற்றுண்டிகள் 10 ரூபா குறைவு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்று பொதியின் விலை 20 ரூபா உயர்வு; பிற சிற்றுண்டிகள் 10 ரூபா குறைவு




இன்று (ஏப்.6) நள்ளிரவு முதல் அமுலில், கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலை 20 ரூபா உயர்ந்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணமாக சமையல் எரிவாயு விலை அதிகரிப்பே காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்ததால், பிற சிற்றுண்டிகள் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்‌ஷன் தெரிவித்தார். இதன் மூலம் உணவகங்களின் விலை நிலவரத்தில் சமநிலை ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.