சர்வதேச சந்தையில் தங்க விலை சரிவு: இன்றைய புதிய விலை வெளியீடு! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்க விலை சரிவு: இன்றைய புதிய விலை வெளியீடு!


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (13.04.2026) குறைவைக் கண்டுள்ளதாக சமீபத்திய வர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,720.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினம் பதிவான 4,747 அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

இதனுடன், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் மாற்றத்தை சந்தித்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் வெள்ளி 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் தாக்கம் இலங்கையிலும் உணரப்படுகின்றது. உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.