Strait of Hormuz அருகே அமெரிக்க கடற்படை விதித்த தடையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை United States கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக Donald Trump தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டதாவது, ‘Tuska cargo ship’ என அழைக்கப்படும் அந்தக் கப்பல் Gulf of Oman பகுதியில் பயணித்தபோது அமெரிக்க கடற்படை பலமுறை எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த எச்சரிக்கைகளை கப்பல் குழுவினர் பின்பற்றாததால், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறைபிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பலின் உள்ளே என்ன பொருட்கள் உள்ளன என்பது தொடர்பாக தற்போது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் துறைமுகத்தை நோக்கிச் சென்ற இந்தக் கப்பல், அந்தப் பாதையில் செல்ல வேண்டாம் என சுமார் 6 மணிநேரம் முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் Donald Trump குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு Iran அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் காரணமாக மத்திய கிழக்கு கடற்பரப்பில் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
