Iran மீது United States மற்றும் Israel இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் தேதி மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக, ஈரான் பல பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான Pope Leo XIV, Vatican City யில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றினார்.
அந்த உரையின் போது, உலகில் நடைபெறும் போர்கள் மனிதர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அமைதி மற்றும் ஒற்றுமை தான் உலகிற்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆட்சியாளர்கள் போர் நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தம் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பாப்பரசரின் இந்த கருத்துகளுக்கு Donald Trump கடுமையாக பதிலளித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், பாப்பரசர் தமது பொறுப்புகளை முறையாக மேற்கொள்வதாக தாம் நம்பவில்லை என்றும், அவர் அரசியல் கருத்துக்களில் அதிகமாக ஈடுபடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், பாப்பரசர் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் மதத் தலைவருக்கான பொறுப்புகளை மட்டும் கவனிக்க வேண்டும் என்றும், இடதுசாரி சிந்தனைகளில் ஈடுபடுவது கத்தோலிக்க திருச்சபையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து மோதல், உலக அரசியல் மற்றும் மதத் தலைமை இடையிலான உறவுகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
