பல மாவட்டங்களுக்கு மின்னல் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மின்னல் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!




மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை இன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் திடீர் பலத்த காற்று வீசக்கூடிய நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்னல் தாக்கங்கள் காரணமாக உயிர் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.