Artemis II திட்டத்தின் கீழ் நிலவை மையமாகக் கொண்ட முக்கியமான விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட Orion spacecraft தனது ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் வந்துள்ளது.
அதன்படி, ஒராயன் விண்கலம் இலங்கை நேரப்படி இன்று (11) அதிகாலை சுமார் 5.30 மணியளவில், San Diego நகரத்துக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 நாட்கள் நீடித்த இந்த விண்வெளிப் பயணம் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அந்த நாளில் ஒராயன் விண்கலம் நிலவை நோக்கி தனது முக்கியப் பயணத்தை தொடங்கியிருந்தது.
இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்தில் மொத்தமாக 406,771 கிலோமீட்டர் (252,756 மைல்கள்) தூரத்தை கடந்துள்ளனர்.
இப்பயணம் மனிதர்கள் இதுவரை விண்வெளியில் மேற்கொண்ட பயணங்களில் மிக நீளமான தூர சாதனையாகப் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றி, எதிர்கால நிலவு மற்றும் ஆழ்விண்வெளி ஆய்வுகளுக்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
