Lanka IOC PLC நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றத்தின் படி, குறிப்பாக டீசல் வகை எரிபொருட்களின் விலைகளில் உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை விபரங்களின் படி:
- Xtra Mile Diesel – ரூபாய் 551 இலிருந்து 590 ரூபாயாக உயர்வு
- Lanka Super Diesel (LSD) – ரூபாய் 575 இலிருந்து 600 ரூபாயாக உயர்வு
- Xtra Green Diesel – ரூபாய் 588 இலிருந்து 620 ரூபாயாக உயர்வு
இந்த விலை மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் Lanka IOC PLC நிறுவனம் தெரிவித்துள்ளது.
