வயிற்றுவலி, வாந்தி யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வயிற்றுவலி, வாந்தி யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு....




யாழ்ப்பாணம் பகுதியில் வாந்தி மற்றும் வயிற்றுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 8 வயது சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த முகமது ஜிஹாட் பவிஹா (8) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், இன்று அதிகாலை 1.00 மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததால், அதிகாலை **4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை**யில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று மதியம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில், குடல்வளரி (Appendicitis) பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வயிற்றுவலி மற்றும் வாந்தியின் போது, வாந்திப் பொருட்கள் எதிர்பாராத விதமாக சுவாசக் குழாயில் சென்றதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.