Lebanon முழுவதும் Israel நடத்திய பாரிய இராணுவ தாக்குதல்களை United Nations பொதுச்செயலாளர் António Guterres கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை அவரது ஊடகப் பேச்சாளர் Stéphane Dujarric வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பொதுச்செயலாளர் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அவர் கடுமையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது லெபனானில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ நடவடிக்கைகள், United States மற்றும் Iran இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் உடனடியாக மோதல்களை நிறுத்த வேண்டும் என்றும், இந்த பிரச்சினைக்கு எந்தவொரு இராணுவத் தீர்வும் கிடையாது என்றும் António Guterres தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் அமைதி முயற்சிகள் அவசியமாகியுள்ளன என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
