ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க போர்க்கப்பல் தடுத்து திருப்பி அனுப்பியது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க போர்க்கப்பல் தடுத்து திருப்பி அனுப்பியது




ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற மற்றுமொரு ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானியக் கொடியுடன் பயணித்த இந்தச் சரக்குக் கப்பலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் USS Spruance (DDG-111) என்ற அமெரிக்கப் போர்க்கப்பல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை ஈரானில் இருந்து புறப்பட்ட சுமார் 10 கப்பல்கள் அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கடற்படை கட்டுப்பாடுகள் அமுலாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஈரான் மீது அழுத்தம் செலுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் 10,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 12க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரானுடன் தொடர்பில்லாத பிற நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக வழக்கம்போல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.