2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.5% வளர்ச்சியைக் கொண்டிருந்தது. பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டிற்கான வளர்ச்சி சுமார் 4.7% ஆக இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அது 5% ஆக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக வலுவான ஏற்றுமதி வர்த்தகம் அமைந்ததாக சீன அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி, உலகளவில் எண்ணெய், இரசாயனப் பொருட்கள் மற்றும் உலோகங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், உலக சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில், சீன பொருளாதாரம் எதிர்பார்ப்பை மீறி வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.