Pakistan Super League தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் Lahore Qalandars அணிக்காக விளையாடும் நட்சத்திர பேட்ஸ்மேன் Fakhar Zaman, பந்து சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
Karachi Kings அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஃபகார் ஜமான் மேல்முறையீடு செய்திருந்தாலும், போட்டி நடுவரான Roshan Mahanama விதித்த தண்டனையை Pakistan Super League Technical Committee உறுதி செய்துள்ளது.
அதன்படி, பந்து சேதப்படுத்தல் மற்றும் விதி 41.3 மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, 2026 PSL தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை காரணமாக, ஃபகார் ஜமான் விரைவில் ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஓய்வு தொடர்பாக அவர் கூறுகையில், “உலகக் கோப்பை முடிந்தபின் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து முன்பு யோசித்திருந்தேன். ஆனால் தற்போது உடனடியாக ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. என் டி20 பயணத்தை சிறப்பாக முடிக்க விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போட்டியின் போது, 13ஆவது ஓவரிலிருந்து ஃபகார் ஜமான் பந்தை சந்தேகத்திற்கிடமாக கையாள்வதை Karachi Kings நிர்வாகம் கவனித்து, நான்காவது நடுவரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நடுவர் Faisal Afridi பந்தை ஆய்வு செய்தபோது, அதில் அந்நியப் பொருள் பயன்படுத்தி சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜமானுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான Basit Ali மற்றும் Kamran Akmal ஆகியோரும் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள், இந்த சம்பவம் தொடர்பாக பெரிய அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அணியின் பிற வீரர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
