பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில், ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பயணத்தில் இருந்த தனியார் பேருந்தின் பிரேக் தொகுதியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, பேருந்தை கட்டுப்படுத்துவதற்காக சாரதி அதனை வீதியோர மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடுமையாகக் காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
