3 நாளில் தங்கம் ரூ.29,000 வீழ்ச்சி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

3 நாளில் தங்கம் ரூ.29,000 வீழ்ச்சி!




உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், இலங்கையிலும் கடந்த மூன்று நாட்களில் மிகப்பெரிய விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று (21.03.2026) ஆகிய மூன்று தினங்களில் மொத்தமாக தங்கத்தின் விலை சுமார் 29000 ரூபாவால் குறைந்துள்ளது. கடந்த 19ஆம் திகதி 13,000 ரூபாவாலும், நேற்று 6,000 ரூபாவாலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்தது. அத்துடன், இன்றைய தினம் விலை மேலும் 10,000 ரூபாவால் விலை குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லைக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தமையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

 கொழும்பு செட்டியார் தெருவின் தகவலின் படி இன்றைய தினம் (21.03.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 347800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 378000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.  அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாவாக காணப்பட்டிருந்தது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாவாக காணப்பட்டிருந்தது.

அதன்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை பத்தாயிரம் ரூபாவாலும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 9,200 ரூபாவாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4490 முதல் 4507 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.