எரிபொருள் நெருக்கடி: வவுனியாவில் மக்கள் அவதியில் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

எரிபொருள் நெருக்கடி: வவுனியாவில் மக்கள் அவதியில்




வவுனியா நகரை அண்டிய பகுதியில் தற்போது கடுமையான எரிபொருள் நெருக்கடி நிலவி வருகின்றது. குறிப்பாக பெற்றோல் இல்லாமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

 வவுனியா நகரை அண்டிய பகுதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில், ஒரே ஒரு நிலையத்தில் மட்டுமே பெற்றோல் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இருப்பு முற்றிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அந்த ஒரே நிலையத்தை நோக்கி மக்கள் பெருமளவில் திரளுகின்றனர். 

நீண்ட வரிசைகளில் நின்று பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிலர் எரிபொருள் பெற முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தினசரி வேலைகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைக்குச் செல்லும் மக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.