மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் வரிசைகளில் நிற்க வேண்டாம் !!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் வரிசைகளில் நிற்க வேண்டாம் !!!


மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.

மேலும் 01 மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் மே மாதத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஹார்மூஸ் நீரிணை ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட மாட்டாது என டி.ஏ.ராஜகருணா கூறினார். .

எரிபொருள் தொகை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிலவும் கேள்விக்கு அதிகமாக எரிபொருளை நுகர்வோர்கள் கொள்வனவு செய்துள்ளதால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளததக கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.