அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை முன்னேற்றம்: ட்ரம்ப் தகவல் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை முன்னேற்றம்: ட்ரம்ப் தகவல்




ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட மிகவும் விரும்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.