நாசா புதிய திட்டம்: சந்திரனில் தளம், செவ்வாய்க்கு அணுசக்தி பயணம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நாசா புதிய திட்டம்: சந்திரனில் தளம், செவ்வாய்க்கு அணுசக்தி பயணம்!




அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரக வியூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. சந்திரனைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத் திட்டங்களைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக அடுத்த ஏழு ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட்டு சந்திரனின் மேற்பரப்பில் ஒரு தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அதேவேளை, செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியில் இயங்கும் விண்கலத்தை அனுப்பும் திட்டங்களையும் அது முன்னெடுத்துள்ளது. 

 நாசாவின் நிர்வாகி ஜரெட் ஐசக்மேன், வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த மாற்றங்களை விளக்கினார். சந்திரனுக்கு அனுப்பப்படும் ரோபோடிக் பயணங்களை அதிகரிப்பதோடு, சந்திரனின் மேற்பரப்பில் அணுசக்திக்கான அடித்தளத்தை நிறுவனம் அமைக்கும் என்றும் அவர் கூறினார்.