ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டபோது இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன.இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தமும், வெடிப்புகளும் பதிவாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தி வரும் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.நள்ளிரவைத் தாண்டிய வேளையில் நிகழ்ந்து வரும் இந்தத் தொடர் வெடிப்புகளால் தெஹ்ரான் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துடன் பலர் நிலத்தடி பாதுகாப்பகங்களை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்ததையடுது்து ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதுவரை ராணுவ தளம், கடற்படை தளம், விமான தளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது எண்ணெய் கிடங்குகள், எரிவாயு ஆலைகளை நோக்கி நகர்ந்துள்ளது.
இப்படியான சூழலில் இத்தகைய தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரானின் தெற்கு புசேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் உள்ள தெற்கு பார்ஸ் எல்பிஜி வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனை அடுத்து ஈரான், கட்டார், சவுதி அரேபியா உட்பட பிற நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள், எரிவாயு ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில் கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராஸ் லஃபானில் உள்ள எல்என்ஜி கேஸ் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
5ல் 4 ஏவுகணைகளை கட்டார் இடைமறித்து அழித்த நிலையில் ஒரு ஏவுகணை ஆலையை தாக்கிது. இதனால் ஆலை தீப்பற்றி எரிந்த நிலையில் தற்போது அங்கு கேஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளதோடு, தங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை எடுக்க உள்ளதாக கட்டார் கூறியுள்ள நிலையில் ஈரானுக்கும், கட்டாருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
