ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
இது குறித்து கடந்த 17ஆம் திகதி நடந்த சபை அமர்வில் சபை முதல் பிமல் ரத்நாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய இன்றைய அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையிலும், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் நெருக்கடி நிலையை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.அதேசமயம், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமங்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து பல்வேறு அச்ச நிலைகளை, பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைய, தற்போதைய இக்கட்டான நிலை குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய அமர்வில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
