2025 உயர்தரப் பெறுபேறுகள் வெளியீடு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

2025 உயர்தரப் பெறுபேறுகள் வெளியீடு



2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையில் தோன்றியவர்கள் தங்களது பெறுபேறுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற பரீட்சைக்கு மொத்தம் 281,810 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதனுடன், 111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் விசாரணை காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெறுபேறுகள் தொடர்பாக மறுமதிப்பீடு (Re-scrutiny) கோரும் மாணவர்கள், ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.