ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறியுள்ளதா கட்டார் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
கட்டார் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அண்டை நாடுகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் மோதலில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்தப் போரில் நேரடியாக சம்பந்தப்படாத நாடுகளும் தாக்குதலுக்குள்ளாகுவது கவலைக்கிடமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இருநாடுகளின் உறவுகளில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
அணுமின் நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படாமல் இருக்க வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர் மேலும் தீவிரமடைந்தால், அது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் சமாதான முயற்சிகளுக்கு கட்டார் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
