ஈஸ்டர் தாக்குதல்: இந்திய தலையீடு சந்தேகம்? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: இந்திய தலையீடு சந்தேகம்?





உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவின் தலையீடு தொடர்பில் இன்னாள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த காலங்களில் பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதை மறுத்திருந்தார். இன்றைய நிலையில் இந்திய புலனாய்வுப் பிரிவு தாக்குதலில் மூன்றாம் தரப்பாக செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன வழங்கியுள்ள வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே தொடர்பான விசாரணையின் போது ஓய்வுபெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன வழங்கிய வாக்கு மூலத்தில் பல விடயங்கள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. தாக்குதல் தொடர்பில் அக்காலப்பகுதியில் நடைபெற்ற விசாரணைகளின் போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய சாரா ஜெஸ்மின் இறந்து விட்டார் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்துமாறு அறிவித்திருந்தார்.

 சாராவின் டிஎன்ஏவும் அக்காலப்பகுதியில் பல சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் இருந்த இந்திய புலனாய்வு பிரிவு பிரதானி ஒருவர் தன்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சாரா ஜெஸ்மின் தொடர்பில் ஏதும் விபரங்கள் கிடைத்ததா என்று வினவுவாராம். சாரா ஜெஸ்மின டபல் ஏஜன்ட் ஆக செயற்பட்டுள்ளாரா?என்ற சந்தேகமும் கடந்த காலங்களில் பேசப்பட்ட விடயமாகும்.அந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலம் இன்னும் பல சந்தேகங்களுக்கு வழியமைக்கிறது. 

]அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்திய புலனாய்வு பிரதானி சாரா ஜெஸ்மின் உயிரோடு இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா என்ற தகவலின்படியே அடுத்த கட்ட செயற்பாடுகளை நகர்த்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.அவர் என்னை பல தடவைகள் சந்தித்த சந்தர்ப்பங்களில் சாரா தொடர்பில் வினவியதாகவும் குறிப்பிடுகிறார். அதன் பின்னர் அவர் தன்னை கடைசியாக சந்தித்த போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.'சாரா ஜெஸ்மின் தொடர்பில் டில்லி தரப்பு தகவல்களை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் பல விடயங்களை தெரிவித்துள்ளார். ஏன் சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் இவ்வளவு முக்கிய புள்ளியாக திகழ்கிறார் என தொடரும் விசாரணைகளில் தெரியவரலாம்.