Belavia எனப்படும் பெலாரஸ் தேசிய விமான சேவை, வரும் ஏப்ரல் மாதத்தில் Minsk National Airport இலிருந்து Mattala Rajapaksa International Airport வரை சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, மத்தள நோக்கி இந்த விசேட விமானப் பயணங்கள் ஏப்ரல் 3 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
இதனுடன், மின்ஸ்க் தேசிய விமான நிலையம் இன்று முதல் ஒக்டோபர் 24 வரை நடைமுறைக்கு வரும் கோடைக்கால அட்டவணையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அட்டவணையின் கீழ் சுமார் 10 விமான நிறுவனங்கள் பெலாரஸ் தலைநகரிலிருந்து தங்களது வழக்கமான சேவைகளை மேற்கொள்ள உள்ளன.
இந்த கால அட்டவணையில் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் மற்றும் ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகள் உட்பட மொத்தம் 34 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையைத் தொடர்ந்து, Tel Aviv நோக்கி மேற்கொள்ளப்பட்ட விமானப் பயணங்கள் ஏப்ரல் 16 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலும், Belavia விமான சேவை மத்தள, டெல்லி, துபாய், இஸ்தான்புல் உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களுக்கு தனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
