யாருக்கு யோகம்? சனிப் பெயர்ச்சி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாருக்கு யோகம்? சனிப் பெயர்ச்சி!





கிரகங்களிலேயே மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். இந்த சனி ஒரு ராசிக்குள் நுழைந்தால் இரண்டரை காலம் வரை அங்கேயே இருப்பார். பிறகு படிப்படியாக நகர்ந்து பார்வையை மாற்றுவதால் அதன் தாக்கம் மிக வீரியமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நீதி பகவானாக அழைக்கப்படும் சனியின் மாற்றம் என்றாலே பலருக்கும் அச்சம் வரும். அந்த வகையில் வரப்போகிற சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் நன்மையும், தீமையும் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க, விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் திகதி அதாவது மார்ச் மாதம் 6 ஆம் திகதி காலை 7.56 மணியளவில் பூரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் மீன ராசியில் வாக்கியம் கணித ரீதியாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.


 அங்கு 24.04.2028 வரை வீற்றிருந்து பலன்களை வழங்கவுள்ளார். அவரது அருட்பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளின் மீது பதிவதால், இந்த ராசிக்காரர்கள் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.

 அதே போல் இந்த சனிப்பெயர்ச்சி, சிம்ம ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் வருகிறது. அதே நேரத்தில், மகர ராசிக்கு ஏழரை சனி முற்றிலும் விலகுகிறது. கன்னி ராசிக்கு கண்டக சனி விலகுகிறது, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. கும்ப ராசிக்கு குடும்ப சனியும், மீன ராசிக்கு ஜென்ம சனியும் தொடங்குகிறது. 


மேலும் மேஷ ராசிக்கு விரய சனியாகி, ஏழரை சனி ஆரம்பமாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் சனியில் இருந்து விடுபடுபவர்கள் சனி பகவான் ஆலயத்திற்கு சென்று எள் தீபம் போட்டால் நன்மை பயக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சனியின் சஞ்சார காலத்தில் 3 முறை குரு பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அதே போல் ராகு - கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளது.