சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளின் கவனத்திற்கு

 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

இதனையொட்டி, பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விசேட கட்டுப்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை பின்வரும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது:

* சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துதல்.
 
*பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல்

 *பரீட்சை வினாப்பத்ததிரங்கள் தொடர்பான எதிர்வுகூறல்களை வெளியிடுதல் அல்லது சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல். 

 இந்தத் தடையை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இம்முறை நாடு முழுவதும் உள்ள 3,545 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.