கத்திமுனையில் வங்கியில் பெருந்தொகைப்பணம் கொள்ளை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கத்திமுனையில் வங்கியில் பெருந்தொகைப்பணம் கொள்ளை

Image result for கத்திமுனைகத்தி முனையில் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபத்கொடயிலுள்ள தனியார் வங்கியொன்றிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாதோர் கத்தியைக் காட்டி குறித்த தனியார் வங்கியில் கொள்ளையில்  ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வங்கியில் இருந்து 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown