உணவு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அவசர எச்சரிக்கை. - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

உணவு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அவசர எச்சரிக்கை.

வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வவுனியா  புகையிரத வீதியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு அருகேயுள்ள நடமாடும் உணவு விற்பனை நிலையத்தில் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போது சுகாதாரத்துக்கு கேடான உணவு பொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரத்துக்கு கேடான உணவுகள் மீட்கப்பட்டதுடன் சுகாதாரத்துக்கு கேடான முறையில் உணவு நிலையத்தை நடத்தியவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்
இதேவேளை, கடந்த காலத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள், எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் சிலர் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

About Unknown