மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது

Image result for கௌரி லங்கேஷ்இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் 6 மாதங்கள் கழித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உளவுத்துறை பிரிவு ஐ.ஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கர்நாடக பொலிஸார்  சட்ட விரோதமாக ஆயுதம் கடத்தியதாக நவீன் குமார் என்ற நபரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
அந்த விசாரணையில் நவீன் குமாருக்கு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. 
இதையடுத்து குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் .
நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Unknown