கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினி!!!

Related imageதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ப்ரபரப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் நேற்று இமயமலைக்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்திடம்  தமிழகத்தின் நிலை குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லாமல் இப்பொழுது இந்த கேள்விகள் வேண்டாம் என்று நழுவியுள்ளார்.
மேலும் இமயமலை பயணம் ஒவ்வொரு வருடமும் செல்வதுதான் என்றும் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக செல்லவில்லை என்று கூறிய ரஜினி தர்மசாலா, ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் இரண்டு வாரங்கள் கழித்து சென்னை திரும்ப தான் திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

About Unknown