மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக பலி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக பலி!

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் நானாட்டான் பகுதியில் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் என்ற 27 வயது பல்கலைக்கழக மாணவரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

About UK TAMIL NEWS