அம்பாந்தோட்டையில் கைக்குண்டுத் தாக்குதல் : 17 பேர் வைத்தியசாலையில்… - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அம்பாந்தோட்டையில் கைக்குண்டுத் தாக்குதல் : 17 பேர் வைத்தியசாலையில்…

அம்பாந்தோட்டை, அங்குனுகொல்ல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் காரணமாக 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 14 பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும், 3 பேர் தங்காலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய நோனாகம வீதியின் வெட்டிய சந்தி பிரதேசத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தை சுற்றி அருகில் இருந்த வீடுகளின் நபர்கள் ஒன்று கூடியிருந்த போது இந்த கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அங்குனுகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About UK TAMIL NEWS