பாலியல் விடுதி நடத்திவந்த முகவருக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட கதி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாலியல் விடுதி நடத்திவந்த முகவருக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட கதி!

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் விடுதி நடத்திவந்த மூன்று பெண்கள் இன்றையதினம் தலவத்துகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த மூன்று பெண்களுடன் அதன் முகாமையாளரும் கைதாகியிருப்பதாக பொலிஸ் தரப்பில் சொல்லபடுகிறது. கண்டி, கல்லேவெல, பாதுக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 21, 29 மற்றும் 39 வயதினைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிற அதே நேரம் இவர்களில் இருவருக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் வாடகைக்குப் பெற்றுக்கொண்ட வீட்டிலேயே இந்த பாலியல் தொழில் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

About UK TAMIL NEWS